சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மழையால் டிரா ஆகவுள்ள 2-வது டெஸ்ட்: 4-ம் நாள் ஆட்ட ஹைலைட்ஸ் விடியோ

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிரா ஆகவுள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2020, 4:58 am

DIN

தொடர் மழை காரணமாக இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிரா ஆகவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 11 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் ஃபவாத் அலாம் இடம்பெற்றுள்ளார். சதாப் கான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள். ஸ்டோக்ஸ், ஆர்ச்சருக்குப் பதிலாக ஸாக் கிராவ்லி, சாம் கரண் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

முதல் நாளன்று இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் மேலும் பல விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி இழந்திருக்கும். 

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. 2-வது நாளிலும் இங்கிலாந்தின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. பாபர் அஸாம் 47 ரன்கள் எடுத்தார். கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தார். 2-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது.

3-ம் நாளன்று மழையால் ஒரு ஓவர் கூட வீச முடியாமல் போனது.

4-வது நாளும் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி 91.2 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஸ்வான் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராட் 4 விக்கெட்டுகளும் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு 4-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது டெஸ்ட் நிச்சயமாக டிரா ஆகும் நிலையில் உள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.