ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 2-ம் இடத்துக்கு முன்னேறினார் ஸ்டூவர்ட் பிராட்

பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்...
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 2-ம் இடத்துக்கு முன்னேறினார் ஸ்டூவர்ட் பிராட்

பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் டிரா ஆனது. 3-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் ஆகஸ்ட் 21 அன்று தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 2-வது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 3 விக்கெட்டுகள் எடுத்த ஆண்டர்சன், 14-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது அப்பாஸ், 8-ம் இடத்தில் உள்ளார். இந்தியாவின் பும்ராவுக்கு 8-ம் இடம் கிடைத்துள்ளது.

பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com