பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கெயில், ரசிகர்கள் இல்லாமல் இன்று தொடங்கும் சிபிஎல் டி20 போட்டி

கெயில் இல்லாமல் ரசிகர்கள் இல்லாமல் சிபிஎல் டி20 போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2020, 5:46 am

DIN

கெயில் இல்லாமல் ரசிகர்கள் இல்லாமல் சிபிஎல் டி20 போட்டி இன்று முதல் தொடங்குகிறது.

இந்த வருட சிபிஎல் போட்டி, டிரினிடாட் & டொபாகோ-வில் உள்ள இரு மைதானங்களில் 33 ஆட்டங்களாக நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று செப்டம்பர் 10-ல் நடைபெறுகிறது.  மொத்தம் 23 நாள்களுக்குத் திகட்ட திகட்ட அதிரடி ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். முதல் ஆட்டத்தில் டிரின்பேகோ நைட்ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் ஃபேன்கோட் செயலியிலும் பார்க்கலாம்.

சிபிஎல் டி20 போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என 162 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைவருக்கும் கரோனா இல்லை என பரிசோதனைகளில் முடிவாகியுள்ளதாக சிபிஎல் போட்டியின் இயக்குநர் மைக்கேல் ஹால் கூறினார். அனைவரும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது போட்டியில் பங்கேற்கிறார்கள். 

சிபிஎல் போட்டியில் பங்கேற்க உறுதியளித்த வீரர்களில் மூவர் மட்டும் கரோனா காரணமாகப் பங்கேற்கவில்லை. ஒரு வீரருக்கு கரோனா உறுதியான நிலையில் அவருடன் பயிற்சியில் ஈடுபட்ட மேலும் இரு வீரர்களும் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். அதேபோல ஒரு பயிற்சியாளருக்கும் கரோனா தொற்று உறுதியானதால் டிரினிடாடுக்கு வரவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடப் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.  

சொந்தக் காரணங்களுக்காக இந்த வருட சிபிஎல் டி20 போட்டியிலிருந்து விலகுவதாக கிறிஸ் கெயில் அறிவித்துள்ளார். இது சிபிஎல் போட்டிக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அறியப்படுகிறது. இப்போட்டியில் அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்தவர் அவர்தான். 48 வயது இந்திய வீரரான பிரவீன் டாம்பே இந்த வருட சிபிஎல் போட்டியில் விளையாடுகிறார். அவரை டிகேஆர் அணி தேர்வு செய்துள்ளது.

சிபிஎல் முடிந்த அடுத்த 9-வது நாள் ஐபிஎல் 2020 போட்டி தொடங்குகிறது. இதனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு ரசிகர்களின் கனவில் கூட சிக்ஸர் மழை பொழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.