ஆண்டர்சன் மிரட்டல்: 41 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் பாகிஸ்தான்

​இங்கிலாந்துடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனின் மிரட்டல் பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
ஆண்டர்சன் மிரட்டல்: 41 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறும் பாகிஸ்தான்


இங்கிலாந்துடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஆண்டர்சனின் மிரட்டல் பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 41 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 583 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அசார் அலி 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய 2-வது ஓவரிலேயே ஆசாத் ஷபிக்கும் 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆண்டர்சனிடம் வீழ்ந்தார். இதையடுத்து, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது அசார் அலியும், ஃபவாத் அலாமும் நிதானம் காட்டத் தொடங்கினர். மீண்டும் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் தடைபட்டு முன்கூட்டியே உணவு இடைவேளை எடுக்கப்பட்டது. உணவு இடைவேளையின்போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 41 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 10 ரன்களுடனும், ஃபவாத் அலாம் 5 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் 542 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com