

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என வென்றது இங்கிலாந்து அணி. முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2-வது மற்றும் 3-வது டெஸ்டுகள் டிரா ஆயின.
இந்நிலையில் இரு அணிகளுக்கு எதிரான டி20 தொடர் நேற்று தொடங்கியது. மான்செஸ்டரில் தொடங்கிய முதல் டி20-யில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 16.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் முதல் டி20 ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
டாம் பேண்டன் 42 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.