ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடர்களில் தொடர்ந்து நன்றாக விளையாடியுள்ள இந்திய அணி!
டெஸ்ட், ஒருநாள் தொடர்களை விடவும் டி20 தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து நன்றாக விளையாடியுள்ளது.


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் கான்பெராவில் இன்று நடைபெறுகிறது.
ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்தியா, டி20 தொடரை கைப்பற்றுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட், ஒருநாள் தொடர்களை விடவும் டி20 தொடர்களில் இந்திய அணி தொடர்ந்து நன்றாக விளையாடியுள்ளது.
2008-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு ஆட்டம் மட்டும் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதற்கு முன்பு தான் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தது.
2011-12: இரு ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமன் ஆனது. சிட்னியில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 31 ரன்களில் வெற்றி பெற அடுத்த டி20 ஆட்டத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
2015-16: ஒருநாள் தொடரை 1-5 எனத் தோற்ற பிறகு டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-0 என முழுமையாக வெற்றி பெற்றது இந்திய அணி. இந்தத் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றியைச் சாத்தியமாக்கினார்கள்.
2018-19: இந்தத் தொடர் வழக்கமான ஒன்றில்லை. இந்தமுறை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றபோதும் டி20 தொடர் 1-1 என சமன் ஆனது. முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவும் 3-வது ஆட்டத்தை இந்தியாவும் வென்றன. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்களில் 132 ரன்கள் மட்டும் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் வீணானது. இதனால் டி20 தொடரை இந்திய அணியால் வெல்ல முடியாமல் போனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...