டெஸ்ட் தரவரிசை: 2-ம் இடத்தில் கோலியுடன் இணைந்தார் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன்
25 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ள ஸ்டீஸ் ஸ்மித், தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.


பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு முன்னேறி கோலியுடன் இணைந்துள்ளார் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரட்டைச் சதம் அடித்த வில்லியம்சன் 34 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 251 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.
இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசை இன்று வெளியிடப்பட்டது. அதில் 2-ம் இடத்தில் உள்ள கோலியுடன் கேன் வில்லியம்சன் இணைந்துள்ளார். இருவரும் தற்போது 886 புள்ளிகளைக் கொண்டுள்ளார்கள்.
25 புள்ளிகள் அதிகமாகப் பெற்றுள்ள ஸ்டீஸ் ஸ்மித், தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 4-ம் இடத்தில் லபுசானேவும் 5-ம் இடத்தில் பாபர் அஸாமும் உள்ளார்கள்.
பந்துவீச்சுத் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்தின் வாக்னர், 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அடுத்த மூன்று இடங்களில் ஸ்டூவர்ட் பிராட், டிம் செளதி, ரபாடா ஆகியோர் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...