சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

டெஸ்ட் தொடர்: மீண்டும் பயிற்சிக்குத் திரும்பினார் ஸ்டீவ் ஸ்மித்

முதுகு வலி காரணமாக ஸ்டீவ் ஸ்மித் நேற்று பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை.

News image
Updated On :16 டிசம்பர் 2020, 11:08 am

DIN

காயம் காரணமாக நேற்று பயிற்சியில் ஈடுபடாத ஆஸி. பேஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், தனது பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

நாளை முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பந்த், ஷுப்மன் கில் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் முதுகு வலி காரணமாக ஸ்டீவ் ஸ்மித் நேற்று பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை. இதனால் முதல் டெஸ்டில் அவர் பங்கேற்பாரா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. எனினும் சக வீரர்களுடன் இணைந்து இன்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்மித் . இதனால் முதல் டெஸ்டில் அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.