வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!
இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

ஜோதிடம்
DPS

ஜோதிடம்
DPS
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஏப்ரல் 3 - 9) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
பயணம் மூலம் சாதகமான வாய்ப்புகள் அமையும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள் கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். விவசாயிகள் புதிய குத்தகைகளைத் தேடிப் பெறுவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள். கலைத்துறையினர் மறைமுக விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டீர்கள்.
பெண்கள் கணவரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 6, 7.
உற்றார், உறவினர்கள், நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூரிலிருந்து சுபச் செய்திகள் வந்துசேரும்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் திட்டமிட்டபடியே செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் உயர்வைக் காண்பீர்கள்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும். அரசியல்வாதிகள் தடைபட்ட காரியங்களை செவ்வனே செய்து முடித்துவிடுவீர்கள்.
கலைத்துறையினருக்கு வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 8, 9.
பொருளாதாரம் உயரக் காண்பீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ ஞானம் வெளிப்படும்.
உத்தியோகஸ்தர்களின் பெயர் பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படும். வியாபாரிகளுக்கு பண வரவு தாராளமாக இருக்கும்.
விவசாயிகள் மாற்றுப் பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள்.
கலைத்துறையினர் சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வீர்கள். பெண்களுக்கு கணவர் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மனதில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். போட்டிகளைச் சரியாக எதிர்கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்படுவீர்கள்.
விவசாயிகள் தரமான விதைகளை வாங்கிப் பயிரிடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும்.
கலைத்துறையினரின் வளர்ச்சியைக் கண்டு சக கலைஞர்கள் பொறாமைப்படுவீர்கள். பெண்களுக்கு பண வரவு சரளமாக இருக்கும். மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
எடுத்த காரியங்களை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயரெடுப்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய கலைகளைக் கற்றுக்கொள்வீர்கள்.
பெண்கள் புதிய ஆடை அணிகளை வாங்குவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உடல்நலம், மனநலம் இரண்டும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடந்தேறும்.
உத்தியோகஸ்தர்கள் நல்ல முறையில் செயல்படுவீர்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி விற்பீர்கள். விவசாயிகளின் பொருள்களுக்கு சந்தையில் மதிப்பு கூடும்.
அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்துக்கு தகவல் அனுப்பும் பொழுது கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் அரசு பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
பெண்கள் கணவர் குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் நட்புடன் பழகுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
உடன் பிறந்தார் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். மனதில் தெளிவு உண்டாகும். வங்கிக் கடன்கள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைக்கு மாறுவீர்கள். வியாபாரிகள் கடையை அழகுபடுத்துவீர்கள். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளை அடைத்துவிடுவீர்கள்.
அரசியல்வாதிகள் கட்சி பிரசாரங்களில் சிறப்பாகச் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் உயர்ந்தோரின் நட்பைப் பெறுவீர்கள்.
பெண்கள் ஆன்மிகத்திலும் தர்ம காரியத்திலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.
உத்தியோகஸ்தர்களின் வேலைத்திறன் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினர் துறையில் மதிப்பையும் உயர்வையும் காண்பீர்கள்.
பெண்கள் கணவரிடத்தில் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அரசு சலுகைகள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் சிறிய முதலீடுகள் செய்து, கடையை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகளுக்கு உரங்களில் அரசு மானியங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடம் புதிய பொறுப்புகளை வழங்கும். கலைத்துறையினர் புதிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். பெண்களுக்கு பண வரவு சீரும் சிறப்புமாக இருக்கும். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
வருமானம் ஏற்றமாக இருக்கும். கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொண்டு அரசுக்குச் சமர்ப்பிக்கவும்.
உத்தியோகஸ்தர்கள் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் பயனற்ற பேச்சுகளைத் தவிர்ப்பீர்கள். கலைத்துறையினர் பாராட்டு பதவிகளைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்துக்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா சென்று வர வாய்ப்புகள் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சரியான முடிவுகளை எடுப்பீர்கள். ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் வேலைகளைக் கூட்டாளிகளிடம் ஒப்படைப்பீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய தொண்டர்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்வீர்கள். பெண்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் மறையும். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
அனைத்து விஷயங்களிலும் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும்.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். வியாபாரிகள் விற்பனை பிரதிநிதிகளை பல இடங்களுக்கு அனுப்பி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.
விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு மாற்றுக் கட்சியினரின் ஆதரவு கிடைக்கும்.
கலைத்துறையினரின் செயல்பாடுகள் பாராட்டப்படும். பெண்கள் யோகா, தியானம் போன்றவற்றை பயில்வீர்கள். மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - ஏப்ரல் 3, 4, 5.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...