கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தொடர்ச்சியாக 3 டெஸ்ட் தோல்விகள்: கேப்டனாக கோலிக்கு முதன்முறை

விராட் கோலியின் தலைமையில் இந்தியக் கிரிக்கெட் அணி முதன்முறையாக 3 டெஸ்ட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 12:46 pm

DIN


விராட் கோலியின் தலைமையில் இந்தியக் கிரிக்கெட் அணி முதன்முறையாக 3 டெஸ்ட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்துள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடைபெற்றது. இதில் 2-வது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்த இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இது டெஸ்ட் ஆட்டங்களில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக 3-வது தோல்வி. 
 
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளைச் சந்திப்பது இதுவே முதன்முறை. 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழுநேர கேப்டனாக 2015-இல் பொறுப்பேற்றார் விராட் கோலி. அதன்பிறகு, 2018-இல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், இங்கிலாந்துக்கு எதிராகவும் தலா ஒரு முறை 2 ஆட்டங்களில் தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தது. நிகழாண்டு தொடக்கத்தில் நியூஸிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தது.

நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு இந்திய அணி விளையாடும் முதல் டெஸ்ட் அடிலெய்ட் டெஸ்ட்தான். இதன்மூலம், நியூஸிலாந்துக்கு எதிராக 2 ஆட்டங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் பகலிரவு டெஸ்ட் என மொத்தம் 3 டெஸ்ட் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளது இந்திய அணி.

நியூஸிலாந்துக்கு எதிரான தோல்விக்கு முன்பு, இந்திய அணி தொடர்ச்சியாக 7 டெஸ்ட் ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதில் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டமும் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.