ஐசிசி தரவரிசை: ஸ்மித்தை நெருங்கும் கோலி
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை நெருங்கியுள்ளார்.


டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஐசிசி தரவரிசையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை நெருங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நிறைவடைந்த நிலையில், ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த விராட் கோலி 2 புள்ளிகள் பெற்று 888 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 1 ரன் மட்டுமே எடுத்ததால் 10 புள்ளிகளை இழந்து 901 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இதனால், கோலி மற்றும் ஸ்மித் இடையிலான வித்தியாசம் 13 புள்ளிகளாகக் குறைந்துள்ளது.
மார்னஸ் லாபுஷானே முதல் இன்னிங்ஸில் 47 ரன்கள் எடுத்ததையடுத்து, முதன்முறையாக 839 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தில் உள்ளார்.
இந்த ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் 73 ரன்கள் எடுத்ததையடுத்து, 592 புள்ளிகளுடன் முதன்முறையாக 33-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு இவரது சிறந்த தரவரிசை எண் 45. 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்த ஜோ பர்ன்ஸ் 2016-க்குப் பிறகு முதன்முறையாக டாப் 50-க்குள் நுழைந்துள்ளார். தற்போது 48-வது இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சு:
முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பூம்ராவை முந்தி 9-வது இடத்தில் உள்ளார். பூம்ரா 10-வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதையடுத்து 904 புள்ளிகளிலிருந்து 910 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இன்னிங்ஸில் 8 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்த ஜோஷ் ஹேசில்வுட் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் டாப்-5க்குள் நுழைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...