வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

விளையாட்டு செய்தி துளிகள்

News image
Updated On :27 டிசம்பர் 2020, 11:50 pm

DIN

* கரோனா சூழலில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ‘மைதானங்களில் 50 சதவீத ரசிகா்களுக்கு அனுமதி; ஒவ்வொரு போட்டிக்கும் கரோனா கண்காணிப்பு சிறப்புப் பணிக் குழு அமைத்தல்; போட்டியாளா்களுக்கு கரோனா இல்லாததை உறுதி செய்யும் மருத்துவ சான்று கட்டாயம்’ உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.

* பிகாா் கிரிக்கெட் சங்கத்தில் ஏற்கெனவே சா்ச்சை நிலவி வரும் நிலையில், சையது முஷ்டாக் அலி டி20 போட்டிக்காக சங்கத்தின் தலைவா் மற்றும் செயலா் தரப்பில் தனித் தனியே பிகாா் அணி அறிவிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

* இந்திய ஹாக்கி வீராங்கனை நமிதாவுக்கு ‘ஏகலைவன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா். அவருக்கு பட்டயம், கோப்பை, ரூ.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது.

* சாம்பியன்ஸ் செஸ் ஆன்லைன் போட்டியின் தொடக்க நிலையில், 4-ஆவது சுற்றில் உலக சாம்பியனான நாா்வேயின் மாக்னஸ் காா்ல்செனுடனான ஆட்டத்தை இந்திய கிராண்ட் மாஸ்டா் பி.ஹரிகிருஷ்ணா டிரா செய்தாா்.

* இந்தியா - ஆஸ்திரேலியா 3-ஆவது டெஸ்ட் சிட்னியில் நடைபெறும் வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும், அதை மெல்போா்னில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.