பதிற்றாண்டில் சிறந்த வீரர் விருதை வென்றார் கோலி
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) பதிற்றாண்டில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்தியக் கேப்டன் விராட் கோலி வென்றுள்ளார்.


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) பதிற்றாண்டில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்தியக் கேப்டன் விராட் கோலி வென்றுள்ளார்.
ஐசிசியின் பதிற்றாண்டுக்கான விருது வழங்கும் விழா காணொலி வாயிலாக திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை விராட் கோலி வென்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கான ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் வென்றார்.
பதிற்றாண்டில் அறம் சார்ந்து விளையாடியதற்கான விருதை இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி வென்றுள்ளார். இங்கிலாந்து வீரர் இயான் பெல்லின் சர்ச்சைக்குரிய வகையிலான ரன் அவுட்டை திரும்பப் பெற்றதற்காக இந்த விருதுக்கு தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருதுகள் விவரம்:
சிறந்த கிரிக்கெட் வீரர்: விராட் கோலி
சிறந்த கிரிக்கெட் வீராங்கனை: எலைஸ் பெரி
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்: ஸ்டீவ் ஸ்மித்
சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்: விராட் கோலி
சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை: எலைஸ் பெரி
சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்: ரஷித் கான்
சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை: எலைஸ் பெரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...