கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மெல்போர்ன் டெஸ்ட் வெற்றி: இந்திய அணியைப் பாராட்டும் விராட் கோலி

என்ன ஓர் அருமையான வெற்றி. ஒட்டு மொத்த அணியும் அபாரமாக விளையாடியுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 6:17 am

DIN

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை அடைந்துள்ளது. இந்த வெற்றிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டின் 4-ம் நாளான இன்று இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை 2-வது இன்னிங்ஸில் 200 ரன்களுக்குள் சுருட்டியது. இதனால் 70 ரன்கள் இலக்கை எளிதாகக் கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெளிநாடுகளில் இந்திய அணி பெற்ற மகத்தான வெற்றியாக இது மதிப்பிடப்படுகிறது.

இந்திய அணியின் இந்த வெற்றிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் விராட் கோலி. ட்விட்டரில் அவர் தெரிவித்ததாவது:

என்ன ஓர் அருமையான வெற்றி. ஒட்டு மொத்த அணியும் அபாரமாக விளையாடியுள்ளது. வெற்றி தேடித் தந்த அணியினருக்காகவும் அருமையாக வழி நடத்திய ரஹானேவுக்காகவும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதிலிருந்து முன்னேற்றம் தான் என்றார். 

முதல் குழந்தை பிறக்கும்போது மனைவி அனுஷ்கா சர்மாவுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்டை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பியுள்ளார் விராட் கோலி. இதனால் டெஸ்ட் தொடரின் மீதமுள்ள மூன்று டெஸ்டுகளுக்கும் ரஹானே கேப்டனாகச் செயல்படவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.