இந்திய அணியினருடன் மீண்டும் இணைந்தார் ரோஹித் சர்மா: விடியோ வெளியிட்ட பிசிசிஐ!

நீங்கள் இளமையாகத் தோற்றமளிக்கிறீர்கள் என ரோஹித் சர்மாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி...
படம்: twitter.com/BCCI
படம்: twitter.com/BCCI

இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா, ஆஸ்திரேலியாவில் இரு வாரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக மீளாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியில் ரோஹித் சா்மா சோ்க்கப்படவில்லை. அதைத் தொடா்ந்து காயத்தில் இருந்து மீண்ட ரோஹித் சா்மாவுக்கு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் பிசிசிஐ சாா்பில் உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட்டது. முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் தலைமையிலான குழு, ரோஹித் சா்மா களமிறங்கும் அளவுக்கு முழு உடற்தகுதியுடன் இருப்பதாகச் சான்றளித்தது. இதையடுத்து ரோஹித் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் மெல்போர்னில் உள்ள இந்திய அணியினருடன் ரோஹித் சர்மா இணைந்துள்ளார்.  

இதுதொடர்பான விடியோ வெளியாகியுள்ளது. அதில், தனிமைப்படுத்தப்பட்டது எப்படி இருந்தது என ரோஹித் சர்மாவிடம் கேட்கிறார் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. அருகே இருந்த ரஹானே, உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் இதை ரசித்தபடி சிரிக்க, நீங்கள் இளமையாகத் தோற்றமளிக்கிறீர்கள் என ரோஹித் சர்மாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார் ரவி சாஸ்திரி. பிசிசிஐ வெளியிட்டுள்ள இந்த விடியோவை ரசிகர்கள், சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com