பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: 3-வது நாளில் இந்தியாவுக்கு 3 தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 3-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இந்தியா 3 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளது.

News image
Updated On :20 பிப்ரவரி 2020, 4:16 pm

DIN


ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் 3-வது நாளான இன்று (வியாழக்கிழமை) இந்தியா 3 தங்கப்பதக்கங்களையும், 1 வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று இந்தியாவின் திவ்யா காக்ரன் ரௌண்ட் ராபின் 68 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். சரிதா மோர் 59 கிலோ எடைப் பிரிவிலும், பின்கி 55 கிலோ எடைப் பிரிவிலும் தங்கம் வென்றனர். 50 கிலோ எடைப் பிரிவு இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த நிர்மலா தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நேற்றைய தினம் வரை ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே ஒரு இந்திய வீராங்கனை மட்டும்தான் தங்கம் வென்றிருந்தார். கரோனா வைரஸ் அச்சம் காரணமாக சீன மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்காததை இந்தியர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

நாளைய தினத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற வினீஷ் போகத் மற்றும் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.