
உலகின் முன்னாள் நெ.1 வில்வித்தை வீராங்கனையும் 2010 காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில் தங்கம் வென்ற, 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்றவருமான தீபிகா குமாரி நேற்று திருமணம் செய்துள்ளார்.
ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்வில் 26 வயது தீபிகா குமாரி, சக வில்வித்தை வீரர் அதானு தாஸை மணமுடித்தார். ஜார்க்கண்ட் முதல் அமைச்சர் ஹேமந்த் சோரன் நேரில் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
2020 ஒலிம்பிக்ஸ் போட்டிக்குப் பிறகு திருமணம் செய்வதாக இருந்த தீபிகா குமாரி, அப்போட்டி அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதால் தற்போது திருமணம் செய்துள்ளார்.
2008-ல் பயிற்சி முகாமில் அதானு தாஸை முதல்முதலாகச் சந்தித்தார் தீபிகா குமாரி. 2018-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதானு தாஸ் - தீபிகா குமாரி திருமணத்துக்குப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.