கார்ல்சனுடன் மோதப் போகிற வீரர் யார்?: உலக செஸ் போட்டி ஒத்திவைப்பு
இந்த வருட டிசம்பர் மாதம் துபையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவதாக இருந்தது.


இந்த வருட டிசம்பர் மாதம் துபையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போட்டி அடுத்த வருடத்துக்குத் தள்ளிவைக்கப்படவுள்ளதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு (எஃப்.ஐ.டிஇ) அறிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டிசம்பர் மாதம் துபையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
2018 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஃபபியானோ கருணாவைத் தோற்கடித்து மீண்டுமொரு முறை உலக சாம்பியன் ஆனார் கார்ல்சன். இதனால் 2020 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்றார். கார்ல்சனுடன் போட்டியிடும் வீரரைத் தேர்வு செய்வதற்காக ரஷியாவில் கடந்த மார்ச் மாதம் கேண்டிடேட்ஸ் போட்டி நடைபெற்றது. ஆனால் கரோனா பரவல் காரணமாகப் பாதியிலேயே போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
துபையில் டிசம்பர் 20 அன்று உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குவதாக இருந்தது. துபை எக்ஸ்போ நடைபெறும் சமயத்தில் இந்தப் போட்டியையும் நடத்த எஃப்.ஐ.டி.இ. திட்டமிட்டது. ஆனால் இந்த வருட துபை எக்ஸ்போ அடுத்த வருட அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாலும் கேண்டிடேட்ஸ் போட்டி முழுதாக நடைபெறாததாலும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்படவுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எஃப்.ஐ.டிஇ-யின் தலைவர் ட்வோர்கோவிச் கூறியுள்ளார்.
2021 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, கார்ல்சனுக்கும் கேண்டிடேட்ஸ் போட்டியை வெல்பவருக்கும் இடையே நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...