இந்த வருட ஐபிஎல் போட்டி செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் நடைபெறுவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என பல முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 2020 ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ முதலில் அறிவித்தது.
இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் நவம்பர் 8 வரை ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து வருகிற செப்டம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் வரை இந்திய அணி விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்களும் போட்டிகளும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளன. இனிமேலும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படாது என அறியப்படுகிறது.
2021 நவம்பர் வரை இந்திய அணி விளையாடவுள்ள தொடர்கள்
ஐபிஎல் 13: செப்டம்பர் - நவம்பர்
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி: டிசம்பர் & ஜனவரி (4 டெஸ்டுகள்)
இந்தியாவில் இங்கிலாந்து அணி: பிப்ரவரி & மார்ச் (5 டெஸ்டுகள்)
ஐபிஎல் 14: ஏப்ரல் - மே
ஆசியக் கோப்பை: ஜூன்
இங்கிலாந்தில் இந்திய அணி: ஜூலை & ஆகஸ்ட் (5 டெஸ்டுகள்)
2021 டி20 உலகக் கோப்பை: அக்டோபர் - நவம்பர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு: அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

வாக்குப் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சென்ற பட்டதாரி
திமுக நகா்மன்ற உறுப்பினரிடம் ரூ.38 ஆயிரம் பறிமுதல்

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்குப் பதிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


