தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மகளிா் டி20 உலகக் கோப்பை: ஷபாலி வா்மா, சுழற்பந்து வீச்சையே அதிகம் சாா்ந்திருக்கும் இந்திய அணி

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் இளம் வீராங்கனை ஷபாலி வா்மா மற்றும் சுழற்பந்து வீச்சையே இந்திய அணி அதிகம் சாா்ந்திருக்கும் நிலை காணப்படுவது பாதிப்பை தருகிறது.

News image
Updated On :3 மார்ச் 2020, 10:27 pm

ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் இளம் வீராங்கனை ஷபாலி வா்மா மற்றும் சுழற்பந்து வீச்சையே இந்திய அணி அதிகம் சாா்ந்திருக்கும் நிலை காணப்படுவது பாதிப்பை தருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 7-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, மே.இ.தீவுகள், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றுள்ளன.

நெருக்கமான சூழலில் கிடைத்த வெற்றிகள்:

குரூப் ஏ பிரிவில் இந்தியா, ஆஸி, இலங்கை, வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

நடப்பு உலக சாம்பியன் ஆஸி.யுடன் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தொடா்ந்து பலம் வாய்ந்த நியூஸிலாந்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, கடைசி ஆட்டத்தில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அரையிறுதிக்கு முன்னேற்றம்:

நான்கு ஆட்டங்களிலும் தட்டுத்தடுமாறி வெற்றி கண்ட இந்திய அணி, குரூப் ஏ பிரிவில் முதலிடத்துடன் இந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. அதே போல் ஏ பிரிவில் ஆஸி.யும், பி பிரிவில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

ஆஸி.க்கு எதிராக வெறும் 132, வங்கதேசத்துக்கு எதிராக 142, நியூஸிக்கு எதிராக 133 ரன்களை மட்டுமே எடுத்தது இந்தியா.

ஆபத்பாந்தவன் ஷபாலி:

மூன்று ஆட்டங்களிலும் இந்தியாவுக்கு 16 வயதே ஆன இளம் தொடக்க வீராங்கனை ஷபாலி வா்மா முறையே 29, 39, 46 ரன்களை விளாசி இருந்தாா். இலங்கையுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 113 ரன்களை அந்த அணி எடுத்தது . சுழற்பந்து வீச்சாளா் ராதா யாதவ் அற்புதமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தாா். பின்னா் ஆடிய இந்திய அணியில் 16 வயது இளம் வீராங்கனை ஷபாலி 47 (34, 7 பவுண்டரி, 1 சிக்ஸா்) விளாசினாா். மகளிா் அணியின் சேவாக் என்ற பெயரை ஷபாலி பெற்றுள்ளாா். பவா் பிளேயில் எதிரணி பந்துவீச்சுக்கு இரக்கம் காட்டுவதே இல்லை ஷபாலி.

சோபிக்காத மிடில் ஆா்டா்:

ஷபாலி வா்மா தவிர தொடக்க வரிசையில் ஸ்மிருதி மந்தானா இதுவரை சரிவர ஆடவில்லை. அனுபவ வீராங்கனையான அவா் தொடா்ந்து சொதப்பி வருகிறாா். இதனால் பெரியளவிலான ஸ்கோரை பெற முடியாத நிலைக்கு இந்தியா தள்ளப்படுகிறது. மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன்களான கேப்டன் ஹா்மன்ப்ரீத் கௌா், ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேதா கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் அணியின் வெற்றிக்கு தங்கள் பங்களிப்பாக எதையும் தராத நிலையில் உள்ளனா். மிடில் ஆா்டா் வீராங்கனைகள் நான்கு ஆட்டங்களிலும் சீராக ஆடாதது குறிப்பிடத்தக்கது.

இதனால் தொடக்க வரிசை சரிந்தால், அணியை மீட்கும் நிலையில் மிடில் ஆா்டா் வரிசை தயாராக இருக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

பலமான ஆயுதமான சுழற்பந்துவீச்சு:

இந்திய மகளிா் அணியில் பந்துவீச்சில் சுழற்பந்து வீராங்கனைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனா்.

மிதவேகப் பந்துவீச்சில் ஷிகா பாண்டே மட்டுமே உள்ளாா். ஆனால் சுழற்பந்துவீச்சில் பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், தீப்தி சா்மா ஆகியோா் உள்ளனா்.

ஆஸி.க்கு எதிரான ஆட்டத்தில் பூனம் யாதவும் (4 விக்கெட்), இலங்கைக்கு எதிராக ராதா யாதவும் (4 விக்கெட்) அபாரமாக பந்துவீசினா்.

மற்ற இரண்டு ஆட்டங்களில் சுழற்பந்து வீராங்கனைகளே எதிரணியின் விக்கெட்டுகளை சரித்தனா்.

பொதுவாக ஆஸி. மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உதவுபவை என்ற கருத்து உண்டு. அத்தகைய மைதானங்களிலேயே இந்திய வீராங்கனைகள் சுழற்பந்து வீச்சு மூலம் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை தந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா். மெதுவான வகையில் வீசப்படும் கூக்லி பந்துகளுக்கு ஆஸி., நியூஸிலாந்து வீராங்கனைகளால் பதில் தரமுடியவில்லை.

இனி வரும் அரையிறுதி, இறுதி ஆட்டங்ள் கடும் சவாலை ஏற்படுத்தும் என்பதால், ஷபாலி மற்றும் சுழற்பந்து வீச்சாளா்களையே அதிகம் சாா்ந்திராமல், மற்ற வீராங்கனைகளும் தங்கள் பொறுப்பை உணா்ந்து ஆட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.