இலக்கை விரட்டுவதில் சச்சினை விடவும் கோலி தான் சிறந்தவர்: டிவில்லியர்ஸ்
இலக்கை விரட்டுவதில் சச்சினை விடவும் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.


இலக்கை விரட்டுவதில் சச்சினை விடவும் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் டி வில்லியர்ஸ் கூறியதாவது:
கோலிக்கும் எனக்கும் சச்சின் தான் ஆதர்ச நாயகர். அவருடைய காலக்கட்டத்தில் ஆளுமையாக இருந்தது, அவர் செய்த சாதனைகள் போன்றவை மற்ற வீரர்களுக்கான சிறந்த முன்னுதாரணங்கள். சச்சின் ஒரு தரத்தைக் கடைப்பிடித்துள்ளார். அதை மற்றவர்கள் பின்தொடர்கிறார்கள் என கோலியும் கூறியுள்ளார்.
ஆனால் இலக்கை விரட்டுவதில் விராட் கோலிதான் சிறந்த வீரர். எல்லா வகையான கிரிக்கெட் ஆட்டங்கள் மற்றும் சூழல்களுக்கு சச்சின் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினாலும் இலக்கை விரட்டுவதில் முன்னணியில் இருப்பவர் கோலி தான்.
கோலி, ஸ்மித் ஆகிய இருவரையும் ஒப்பிடச் சொன்னால் கோலியை ஃபெடரர் என்றும் ஸ்மித்தை நடால் என்றும் கூறுவேன். ஸ்மித், மனவலிமை கொண்டவர். ரன்கள் எடுக்கும் சுலபமான வழிகளைக் கண்டறிந்தவர். இயற்கையாகவே திறமை கொண்டவர் போலத் தோன்றாது. ஆனால் நிறைய சாதனைகளை உடைப்பார். மனத்தளவில் ஸ்மித் தான் சிறந்த பேட்ஸ்மேன். கோலியும் உலகம் முழுக்க, பல அழுத்தமான தருணங்களில் ரன்கள் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...