ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவழிப்பது இப்போதுதான்: விராட் கோலி உருக்கம்

கரோனா ஊரடங்கால் எப்போதும் இல்லாத அளவுக்கு அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவழிக்கிறேன் என விராட் கோலி கூறியுள்ளார்.

News image
Updated On :12 மே 2020, 5:55 am

DIN

கரோனா ஊரடங்கால் எப்போதும் இல்லாத அளவுக்கு அனுஷ்கா சர்மாவுடன் நீண்ட நேரம் செலவழிக்கிறேன் என விராட் கோலி கூறியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோலி கூறியதாவது:

எனக்கு அனுஷ்காவைத் தெரிந்த நாள் முதல், இப்போதுதான் அவருடன் நீண்ட நேரம் செலவழிக்கிறேன். பொதுவாக நான் சுற்றுப்பயணத்தில் இருப்பேன், அல்லது அவர் படப்பிடிப்பில் இருப்பார். அவர் மும்பையில் படப்பிடிப்பில் இருக்கும்போது நான் வீட்டில் இருப்பேன். அல்லது நான் சென்று அவரைப் பார்ப்பேன்.

யாராவது ஒருவர் பணியில் இருக்கும் சூழலில் தான் எப்போதும் இருப்போம். ஆனால், இப்போதுதான் தினமும் இருவரும் வீட்டில் உள்ளோம். இதுபோல இருவரும் வீட்டில் ஒன்றாக நேரத்தைச் செலவழிப்போம் என நினைக்கவேயில்லை. இதுபோன்ற கடினமான நேரங்களில் நேர்மறையான விஷயம் இதுதான்.

ஒருவர் மீது மற்றவர் அதிக நம்பிக்கை வைத்திருப்போம். இப்போது அந்த நம்பிக்கை இன்னும் வலுவாகியுள்ளது. இருவரும் நீண்ட நேரம் ஒன்றாக இல்லாமல் போனால் சில விஷயங்களை அறியாமல் இருப்போம். ஆனால் எங்களுக்கு எல்லாமும் ஒன்றுதான். இரு நாள்களோ பல நாள்களோ இருவருக்கும் ஒன்றுதான். இந்தத் தருணம் அற்புதமாக உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.