வில்லியம்சனின் தலைமைப் பதவிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை: நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்
கேன் வில்லியம்சனின் தலைமைப் பதவிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


கேன் வில்லியம்சனின் தலைமைப் பதவிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்டுகளிலும் தோற்றதால் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் தலைமைப் பதவிக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து வகை கிரிக்கெட் ஆட்டங்களுக்கும் வில்லியம்சன் கேப்டனாக இருப்பதால் அவர் கூடுதல் பாரத்தைச் சுமக்கிறார், இதனால் டெஸ்ட் கேப்டனாக டாம் லதமை நியமிக்க நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளதாக, தி கிரவுட் கோஸ் வைல்ட் என்கிற விளையாட்டுச் செய்திகள் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெறும் செய்தியாளர் ஜேம்ஸ் கெம்ஆனி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பயிற்சியாளர் கேரி ஸ்டட், லதமை டெஸ்ட் கேப்டன் ஆக்க முடிவு செய்துள்ளார். வில்லியம்சனிடமிருந்து டி20 பதவியைப் பறித்தால் அவருக்குப் பிரச்னை எதுவும் இருக்காது. ஆனால் இவர்களுடைய திட்டம் அதுவாக இல்லை என்று கூறியிருந்தார். இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இத்தகவலை மறுத்துள்ளது. வில்லியம்சனின் தலைமைப் பதவிக்கு ஆபத்து என்கிற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோற்ற நியூஸிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் 0-5 என முழுத்தோல்வியைத் தழுவியது. எனினும் அடுத்து நடைபெற்ற ஒருநாள், டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியை வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...