சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அடிலெய்டில் பகலிரவு டெஸ்ட்: தினமும் 27,000 ரசிகர்களுக்கு அனுமதி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன.

News image
Updated On :10 நவம்பர் 2020, 4:57 am

DIN

ஆஸ்திரேலியாவில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்கள் நடைபெறவுள்ளன. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு நேராக ஆஸ்திரேலியா செல்கிறார்கள் இந்திய வீரர்கள். ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.

நான்கு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் தொடங்குகிறது. டிசம்பர் 17 - 21 வரை பகலிரவு டெஸ்டாக நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் தினமும் 27,000 ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக அடிலெய்ட் மைதானத்தில் 50% ரசிகர்களுக்கு மட்டுமே இந்த முறை அனுமதி அளிக்கப்படுகிறது. 

அதேபோல ஒருநாள், டி20 தொடர்களிலும் மைதானத்தில் 50% ரசிகர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. கடைசி டெஸ்ட் நடைபெறும் பிரிஸ்பேன் மைதானத்தில் 75% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.