பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய வீரர்களுக்கு கரோனா தொற்று இல்லை

​ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
படம்: டிவிட்டர் | பிசிசிஐ
Updated On :14 நவம்பர் 2020, 4:35 pm

DIN


ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்கள். வீரர்கள் அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இந்திய வீரர்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். பயிற்சியைத் தொடங்கினாலும், ஆஸ்திரேலியாவில் முதலிரண்டு வாரங்கள் அவர்கள் தனிமையில்தான் இருக்க வேண்டும்.

சுற்றுப்பயணத்தின் தொடக்கமாக ஒருநாள் தொடர் அமைகிறது.

நவம்பர் 27, 29 மற்றும் டிசம்பர் 2 ஆகிய தேதிகளில் ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

டிசம்பர் 4, டிசம்பர் 6 மற்றும் டிசம்பர் 8 ஆகிய தேதிகளில் டி20 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

முதல் டெஸ்ட் ஆட்டம் அடிலெய்ட் ஓவலில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இது டிசம்பர் 17 முதல் 21 வரை நடைபெறுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.