வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இந்திய டி20 அணியில் அஸ்வின்: முகமது கயிஃப் விருப்பம்

ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய ஆர். அஸ்வின், இந்திய டி20 அணியில் மதிப்புமிக்க வீரராக இருப்பார் என...

News image
Updated On :19 நவம்பர் 2020, 5:55 am

DIN

ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய ஆர். அஸ்வின், இந்திய டி20 அணியில் மதிப்புமிக்க வீரராக இருப்பார் என முன்னாள் வீரர் முகமது கயிப் கூறியுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து விளையாடி வரும் அஸ்வின், கடந்த மூன்று வருடங்களாக ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடவில்லை. கடைசியாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 2017-ல் ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடினார்.

எனினும் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த வருடம் தில்லி அணிக்காக விளையாடிய அஸ்வின், 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அஸ்வின் பற்றி முன்னாள் வீரர் முகமது கயிஃப் கூறியதாவது:

கோலி, பொலார்ட், கெய்ல், வார்னர், டி காக், கருண், பட்லர், ஸ்மித், படிக்கல், பூரான் என ஐபிஎல் போட்டியில் பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை அஸ்வின் எடுத்துள்ளார். பெரும்பாலான விக்கெட்டுகளை பவர்பிளே பகுதியில் எடுத்துள்ளார். இந்திய டி20 அணியில் மதிப்புமிக்க வீரராக அஸ்வின் இருப்பார் எனத் தோன்றுகிறது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.