47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐபிஎல் போட்டியில் சாதித்ததை வைத்து இந்திய அணி கேப்டனை ஏன் தேர்வு செய்யக் கூடாது?: கெளதம் கம்பீர் கேள்வி

ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் ஒரு வீரரை இந்திய அணிக்குத் தேர்வு செய்கிறோம்...

News image
Updated On :24 நவம்பர் 2020, 5:21 am

DIN

ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் ஒரு வீரரை இந்திய அணிக்குத் தேர்வு செய்கிறபோது அதேபோல கேப்டனையும் ஏன் தேர்வு செய்யக்கூடாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கேப்டனாக ஐந்தாவது முறையும் வீரராக ஆறாவது முறையும் ஐபிஎல் கோப்பையை வென்று மகத்தான ஐபிஎல் வீரராகப் பெயர் பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.

இந்நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதுபற்றி ஒரு பேட்டியில் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியதாவது:

விராட் கோலி மோசமான கேப்டன் இல்லை. ஆனால் ரோஹித் சர்மா நல்ல கேப்டன். இருவருடைய தலைமைப்பண்பிலும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன.

ஐபிஎல் போட்டியின் அடிப்படையில் ஒரு வீரரை இந்திய அணிக்குத் தேர்வு செய்கிறோம். அதேபோல ஐபிஎல்-லில் சாதித்ததை வைத்து இந்திய அணி கேப்டனையும் ஏன் தேர்வு செய்யக்கூடாது? அப்படி இல்லாவிட்டால் ஐபிஎல் போட்டியை அளவுகோலாக வைத்து பேட்டிங், பந்துவீச்சுத் திறமைகளையும் மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.