47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோனி போன்ற ஒரு வீரர் கோலிக்குத் தேவை: மைக்கேல் ஹோல்டிங்

இலக்கை விரட்டும்போது ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்...

News image
Updated On :28 நவம்பர் 2020, 10:59 am

DIN

இந்திய அணி வெற்றி பெற தோனி போன்ற ஒரு வீரர் தேவை என முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சோ்த்து தோல்வி கண்டது.

இதையடுத்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான மைக்கேல் ஹோல்டிங், நேற்றைய ஆட்டம் பற்றி தன்னுடைய யூடியூப் சேனலில் கூறியதாவது:

இந்திய அணியில் திறமையான வீரர்கள் உள்ளார்கள். ஆனால் தோனி இல்லாமல் கோலியின் அணி தடுமாறும் என எனக்குத் தெரியும். இன்னிங்ஸின் நடுவில் களமிறங்கும் தோனி இலக்கை விரட்டும்போது ஆட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். தோனி அணியில் இருக்கும்போது மிகச்சிறப்பாக இலக்குகளை இந்திய அணி விரட்டியுள்ளது. டாஸ் வென்று எதிரணியை முதலில் பேட்டிங் செய்யச் சொல்வதற்கு இந்திய அணி அஞ்சியதே இல்லை. ஏனெனில் தோனியால் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். தற்போது இந்திய அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் உள்ளார்கள். எனினும் தோனி போன்ற ஒரு வீரர் இந்திய அணிக்குத் தேவை. தோனியின் ஆட்டத்திறனை மட்டும் கொண்டிராமல் அவருடைய மனவலிமையும் அந்த வீரருக்கு இருக்கவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.