வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பட்லர் அதிரடி: 2-வது டி20 ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி

​ஆஸ்திரேலியாவுடனான 2-வது டி20 ஆட்டத்தில் பட்லரின் அதிரடியால் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :6 செப்டம்பர் 2020, 5:00 pm

DIN


ஆஸ்திரேலியாவுடனான 2-வது டி20 ஆட்டத்தில் பட்லரின் அதிரடியால் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணிக்கு தொடக்கம் மிகவும் மோசமாக அமைந்தது. டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமலும், அலெக்ஸ் கேரி 2 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால், அந்த அணி 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதையடுத்து, பின்ச் மற்றும் ஸ்டாய்னிஸ் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். எனினும், இந்த இணையும் ஒரு ஓவர் இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. பின்ச் 40 ரன்களும், ஸ்டாய்னிஸ் 35 ரன்களும் எடுத்தனர். மேக்ஸ்வெல் 26, அகார் 23 என ஓரளவு ரன் சேர்த்து ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் அதிரடி காட்டி பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்தார். இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. பேர்ஸ்டோவ் 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பட்லருடன் மலான் இணைந்தார். இந்த இணை சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைக்க, இங்கிலாந்துக்குத் தேவையான ரன் ரேட் நெருக்கடிக்குள்ளாகாமல் இருந்தது.

2-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் மலான் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், பட்லர் அரைசதம் கடந்து நம்பிக்கையளித்து வந்தார். அடுத்து களமிறங்கிய பேண்டன் (2), மார்கன் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், ஆட்டத்தில் லேசான விறுவிறுப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 19-ஓவரில் மொயீன் அலி சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து வெற்றி இலக்கை எளிதாக்கினார். அதே ஓவரில் பட்லரும் இமாலய சிக்ஸர் அடிக்க இங்கிலாந்து வெற்றி இலக்கை அடைந்தது.

18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்லர் 54 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.