இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இணையம் வழியாக கிரிக்கெட் வகுப்புகளைப் பிரபல கிரிக்கெட் வீரர்கள் தோனியும் அஸ்வினும் நடத்தி வருகிறார்கள்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 7,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று பாதிப்பால் 13-ஆவது சீசன் போட்டிகள் ஏப். 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இணையம் வழியாக கிரிக்கெட் வகுப்புகளைப் பிரபல கிரிக்கெட் வீரர்கள் தோனியும் அஸ்வினும் நடத்தி வருகிறார்கள். தனக்கு நேரடியாகத் தொடர்பு இல்லாத எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாடமிக்கு இச்சமயத்தில் உதவி வருகிறார் தோனி. அந்த அகாடமியின் பயிற்சியாளர்கள், கிரிக்கெட் வீரர்களுக்கு இணையம் வழியாக கிரிக்கெட் வகுப்புகளை எடுத்து வருகிறார். அதேபோல தன்னுடைய அஸ்வின்ஸ் அகாடமி மாணவர்களுக்கும் இணையம் வழியாக கிரிக்கெட் பயிற்சிகளைக் கற்றுத் தருகிறார் அஸ்வின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பாஜகவுக்கு முதல்வா் பதவி அளித்தது ஏன்? நிதீஷ் குமாா் கட்சி விளக்கம்

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


