வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

169 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்: முதல் டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்துக்கு 277 ரன்கள் இலக்கு!

2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் முதல் டெஸ்டை வெற்றி பெற...

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 10:27 am

DIN

2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் முதல் டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 277 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இங்கிலாந்து அணி அடுத்ததாக பாகிஸ்தானுடன் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. மான்செஸ்டரில் முதல் டெஸ்ட் தொடங்கியுள்ளது.

கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் நோ பால் குறித்த முடிவுகளைகளை 3-ம் நடுவர் கவனிக்கவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தது. இரு சுழற்பந்துவீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது பாகிஸ்தான் அணி. பென் ஸ்டோக்ஸ் 100% உடற்தகுதியில் இல்லாமல் போனாலும் இந்த டெஸ்டில் விளையாடுவதாக ஜோ ரூட் கூறியுள்ளார். 

பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீரர் மசூத் 156 ரன்கள் எடுத்து அசத்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யாசிர் ஷா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இன்று தனது 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யாசிர் ஷா 24 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து அணிக்குப் பெரிதும் உதவினார். இங்கிலாந்து அணித் தரப்பில் பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி முதல் டெஸ்டை வெற்றி பெற 277 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.