2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் முதலில் பேட்டிங், இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள்!

2-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் தொடங்கியுள்ளது. 
2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் முதலில் பேட்டிங், இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 11 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் ஃபவாத் அலாம் இடம்பெற்றுள்ளார். சதாப் கான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள். ஸ்டோக்ஸ், ஆர்ச்சருக்குப் பதிலாக ஸாக் கிராவ்லி, சாம் கரண் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

சொந்தக் காரணங்களுக்காக நியூசிலாந்து செல்ல வேண்டியிருப்பதால் கடைசி இரு டெஸ்டுகளில் இருந்து ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். ஐசிசி ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் உள்ளார்கள். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் இடத்தில் பென் ஸ்டோக்ஸ் உள்ளார். 7-ம் இடத்தில் வோக்ஸூம் 10-ம் இடத்தில் பிராடும் உள்ளார்கள். இதனால் முக்கியமான ஒரு ஆல்ரவுண்டர் இல்லாமல் கடைசி இரு டெஸ்டுகளில் விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. டெஸ்ட் தொடரின் முடிவை இது மிகவும் பாதிக்கும் என ஸ்டோக்ஸின் விலகல் குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட் தொடர் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com