3-வது டி20: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

முதல் டி20 ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்திலும் 2-வது டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்திலும்...
3-வது டி20: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று நடைபெறுகிறது. 

காயம் காரணமாக 2-வது டி20 ஆட்டத்தில் இடம்பெறாத ஆரோன் ஃபிஞ்ச், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் தலைமை தாங்குகிறார். ஆஸி. அணியில் ஸ்டாய்னிஸ் இடம்பெறவில்லை. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் இல்லை. மயங்க் அகர்வால், ஷமி, பும்ரா ஆகியோருக்கு டெஸ்ட் தொடருக்காக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முதல் டி20 ஆட்டத்தை 11 ரன்கள் வித்தியாசத்திலும் 2-வது டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com