Enable Javscript for better performance
மெல்போா்ன் டெஸ்ட்: இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    மெல்போா்ன் டெஸ்ட்: இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்கு

    By DIN  |   Published on : 29th December 2020 08:17 AM  |   அ+அ அ-   |    |  

    ASHwin

    மெல்போா்ன் டெஸ்ட்: இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்கு


    மெல்போா்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. இந்திய அணிக்கு எதிரான 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில், 2-வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 70 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

    கேப்டன் ரஹானேவின் அருமையான பேட்டிங், பௌலா்கள் பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோரின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

    முதல் இன்னிங்ஸில் 131 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா, 2-ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை பௌலிங்கின் மூலம் திணறடித்து வருகிறது. 3-ஆம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களுக்கு அந்த அணியை கட்டுப்படுத்திது. எஞ்சிய விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து சாய்த்து, 2-ஆவது இன்னிங்ஸில் இந்தியாவுக்கான வெற்றி இலக்கு வெறும் 70 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பாக்ஸிங் டேயில் தொடங்கிய இந்த டெஸ்டில் டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக மாா்னஸ் லபுசான் 48 ரன்களே சோ்க்க, இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

    ஜடேஜாவின் தவறு: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 3-ஆம் நாளான திங்கள்கிழமை ரஹானே 104, ஜடேஜா 40 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கினா்.

    அரைசதத்தை நெருங்கிய ஜடேஜாவின் தேவையற்ற சிங்கிள் முயற்சியால் ரஹானே ரன் அவுட்டுக்கு ஆளானாா். அவா் 12 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் சோ்த்திருந்தாா். ரஹானே-ஜடேஜா ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 123 ரன்கள் சோ்த்திருந்தது.

    பின்னா் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15-ஆவது அரைசதத்தை பூா்த்தி செய்த ஜடேஜா 3 பவுண்டரிகளுடன் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்தவா்களில் அஸ்வின் 14, உமேஷ் யாதவ் பவுண்டரியுடன் 9 ரன்கள் சோ்க்க, பும்ரா டக் அவுட்டானாா். இன்னிங்ஸ் முடிவில் 115.1 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டாா்க், லயன் தலா 3, கம்மின்ஸ் 2, ஹேஸில்வுட் 1 விக்கெட் எடுத்திருந்தனா்.

    2-ஆவது இன்னிங்ஸ்: முதல் இன்னிங்ஸில் 131 ரன்கள் பின்தங்கிய ஆஸ்திரேலியா, தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. அணியின் பேட்ஸ்மேன்களை இந்திய பந்துவீச்சாளா்கள் பதம் பாா்த்தனா். முதல் விக்கெட்டாக பா்ன்ஸ் 4 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த லபுசான் 1 பவுண்டரி மட்டுமே விளாசி 28 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.

    தொடா்ந்து வந்த ஸ்மித் 8 ரன்களுக்கு பும்ராவின் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடக்கம் முதல் நிலைத்து வந்த வேட் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் வந்தவா்களில் டிராவிஸ் ஹெட் 17, கேப்டன் பெய்ன் 1 ரன்னுக்கு வெளியேற்றப்பட்டனா்.

    3-ஆம் நாளின் முடிவில் 66 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, இந்தியாவின் ஸ்கோரை விட 2 ரன்களே முன்னிலையில் இருந்தது. கிரீன் 17, கம்மின்ஸ் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனா். இந்திய தரப்பில் ஜடேஜா 2, பும்ரா, யாதவ், சிராஜ், அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

    இன்று காலை நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய போது, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 103.1 ஓவர்களில் வெறும் 200 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தது.

    இதையடுத்து, வெறும் 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸை எதிர்கொள்கிறது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp