வெற்றியை நெருங்கும் மேற்கிந்தியத் தீவுகள்: கடைசி செஷனில் அதிசயம் நிகழ்த்துமா இங்கிலாந்து?

​இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கடைசி செஷனில் 57 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.
வெற்றியை நெருங்கும் மேற்கிந்தியத் தீவுகள்: கடைசி செஷனில் அதிசயம் நிகழ்த்துமா இங்கிலாந்து?


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றி பெற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கடைசி செஷனில் 57 ரன்கள் தேவை என்ற நிலை உள்ளது.

இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. 

313 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து: விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்யவும் 

இந்த ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 200 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிராத்வைட் மற்றும் கேம்பெல் களமிறங்கினர். ஆர்ச்சர் வீசிய யார்க்கர் பந்தில் கால் பகுதியில் காயம் ஏற்பட்டதால் கேம்பெல் ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதைத் தொடர்ந்து, ஷை ஹோப் களமிறங்கினார்.

இதன்பிறகு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். முதல் விக்கெட்டாக பிராத்வைட் ஆர்ச்சர் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய புரூக்ஸும் ஆர்ச்சர் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஹோப்பும் வுட் பந்தில் போல்டானார். இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 27 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதன்பிறகு, ராஸ்டன் சேஸுடன் ஜோடி சேர்ந்த பிளாக்வுட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இணை மேற்கிந்தியத் தீவுகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் விளையாடியது. 4-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் ராஸ்டன் சேஸ் 37 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும் பிளாக்வுட் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து வருகிறார். கடைசி நாள் ஆட்டத்தின் தேனீர் இடைவேளையின்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது. பிளாக்வுட் 65 ரன்களுடனும், டௌரிச் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

பிளாக்வுட்
பிளாக்வுட்

கடைசி செஷனில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்படுகிறது. இங்கிலாந்து அணி வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. 

தற்போதைய நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியே ஆதிக்கத்தில் உள்ளது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடைசி செஷனில் அதிசயம் நிகழ்த்தினால், இந்த ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com