இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு: 19 வயது வீரர் இடம்பிடித்தார்!

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் - ஏபி
படம் - ஏபி

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

இதையடுத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதில் சொந்தக் காரணங்களால் தங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர், பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 29 பேர் கொண்ட இந்த அணியில் யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதர் அலி தேர்வாகியுள்ளார்.

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான பாகிஸ்தான் அணி:

அஸால் அலி (டெஸ்ட் கேப்டன்), பாபர் அஸாம் (டி20 கேப்டன், டெஸ்ட் துணை கேப்டன்), அபித் அலி, ஃபகார் ஸமான், இமா உல் ஹக், ஷான் மசூத், அசாத் சபிஹ், ஃபவாத் அலாம், ஹைதர் அலி, இஃப்திகர் அஹமது, குஷ்டில் ஷா, முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், முகமது ரிஸ்வான், சர்ஃபராஸ் அஹமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஹாரிஸ் ரஃப், இம்ரான் கான், முகமது அப்பாஸ், முகமது ஹஸ்நயின், நசீம் ஷா, ஷாகீன் அப்ரிடி, சோஹைல் கான், உஸ்மான் ஷின்வாரி, வஹாப் ரியாஸ், இமாத் வாசிம், கஷிஃப் பட்டி, ஷதாப் கான், யாசிர் ஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com