இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜின் தந்தை காலமானார்
By DIN | Published On : 21st November 2020 01:20 PM | Last Updated : 21st November 2020 01:20 PM | அ+அ அ- |

தந்தை, தாயுடன் சிராஜ்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜின் தந்தை மரணமடைந்துள்ளார். எனினும் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் சிராஜால் இந்தியாவுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
26 வயது சிராஜ் இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் ஆட்டத்திலும் 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணிக்கு விளையாடி வருகிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள சிராஜ், ஆஸ்திரேலியாவில் தற்போது அணியினருடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சிராஜின் தந்தை முகமது கோஸ் (53), நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய வீரர்கள் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். எனினும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தந்தை மரணமடைந்த நிலையிலும் கரோனா அச்சுறுத்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் சிராஜால் தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சிராஜின் தந்தை மறைவுக்கு ஆர்சிபி அணியும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...