ஐபிஎல்: தில்லி கேபிடல்ஸ் வீரர் அக்ஷர் படேலுக்கு கரோனா பாதிப்பு
சென்னைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அக்ஷர் படேல், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
27 வயது அக்ஷர் படேல், சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று 3 டெஸ்டுகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகில் கவனம் பெற்றார். இதுதவிர இந்திய அணிக்காக 38 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். 2014 முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் அக்ஷர் படேல் இதுவரை 97 ஆட்டங்களில் 80 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இந்நிலையில் அக்ஷர் படேல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருட ஐபிஎல் போட்டியில் கொல்கத்தாவைச் சேர்ந்த நிதிஷ் ராணாவுக்குப் பிறகு கரோனாவால் பாதிக்கப்படும் 2-வது வீரர், அக்ஷர் படேல். (கரோனாவிலிருந்து நிதிஷ் ராணா மீண்டுவிட்டார்.)
கரோனாவால் அக்ஷர் படேல் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வீரர், 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ விதிமுறைகள் கூறுகின்றன. இரு வாரங்கள் கழித்தே ஐபிஎல் போட்டியில் அக்ஷர் படேல் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தில்லி அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...