தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஐபிஎல்-இல் 8 ஆண்டுகளை நிறைவு செய்த பூம்ரா!

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பும்ரா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

News image
2013-இல் பும்ரா
Updated On :4 ஏப்ரல் 2021, 11:24 am

DIN

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரீத் பும்ரா ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

ஏப்ரல் 4, 2013 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கி ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி 3 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அதே ஓவரில் கோலியை வீழ்த்தி ஐபிஎல் கிரிக்கெட்டில் முதன்முதலாக தனது முத்திரையைப் பதித்தார். ஐபிஎல்-இல் அவரது 100-வது விக்கெட்டும் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 3 ஆண்டுகளிலேயே இந்திய அணிக்காகவும் அறிமுகமானார். மும்பை இந்தியன்ஸ் அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த பும்ரா, இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார்.

இதுவரை 92 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள பும்ரா 109 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

8 ஆண்டுகள் நிறைவு செய்தது, நேற்று போல் இருப்பதாக பும்ரா சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.