திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆர்சிபி அணியைச் சேர்ந்த பிரபல வீரருக்கு கரோனா பாதிப்பு

ஆர்சிபி அணியைச் சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

News image
Updated On :5 ஏப்ரல் 2021, 5:22 am

DIN

ஆர்சிபி அணியைச் சேர்ந்த இளம் வீரர் தேவ்தத் படிக்கல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது. 

ஏப்ரல் 9 அன்று சென்னையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் மும்பையும் பெங்களூரும் மோதுகின்றன. அடுத்த நாள், மும்பையில் சென்னையும் தில்லியும் மோதுகின்றன. மும்பையில் 10 ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் ஆர்சிபி இளம் வீரர் தேவ்தத் படிக்கல், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 20 வயது படிக்கல் இதன் காரணமாகத் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அடுத்த பரிசோதனையில் கரோனா இல்லை என உறுதியான பிறகு அணியினருடன் அவர் மீண்டும் இணைந்துவிடுவார். கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் படிக்கல்லால் முதல் ஆட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

கடந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கு அறிமுகமான படிக்கல், 473 ரன்கள் எடுத்து ஆச்சர்யப்படுத்தினார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டால் அலி கோப்பை டி20 போட்டியில் 6 ஆட்டங்களில் 218 ரன்கள் எடுத்தார். 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் கரோனாவால் பாதிக்கப்படும் 3-வது வீரர் படிக்கல். இதற்கு முன்பு அக்‌ஷர் படேல், நிதிஷ் ராணா ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.