டி20 உலகக் கோப்பை - மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி ஈரானில் உள்ள இந்திய மாணவ, மாணவிகளின் கதி என்ன?இன்று (மார்ச் 1) இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து! ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்புதமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம்- பிரதமர் மோடி பழிவாங்கினால் விளைவுகள் கடுமையாக இருக்கும்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி இஸ்ரேல் - ஈரான் போர்! இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்!நாக்பூரில் வெடிபொருள் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: 15 பேர் பலிஈரான் பள்ளி மீது தாக்குதல்: பலி எண்ணிக்கை 148-ஆக உயர்வு
/

லார்ட்ஸ் டெஸ்டிலும் அஸ்வின் இடம்பெறாதது ஏன்?: விராட் கோலி விளக்கம்

இங்கிலாந்து தொடரில் ஒரு டெஸ்டிலாவது அஸ்வின் விளையாடுவாரா என்கிற கேள்விகள் எழுந்தன.  

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:54 am

DIN

முதல் டெஸ்டில் விளையாடாத அஸ்வின், லார்ட்ஸ் டெஸ்டிலும் இடம்பெறாதது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

முதல் டெஸ்டில் அஸ்வின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இது எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சமீபகாலமாக வெளிநாடுகளிலும் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். ஆஸ்திரேலியாவில் லயனை விடவும் அற்புதமாகப் பந்துவீசினார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றிலும் அஸ்வினின் பந்துவீச்சு மெச்சும்படி இருந்தது. பேட்டிங்கிலும் இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் சதமடித்தார். 

இங்கிலாந்தில் சுழற்பந்துவீச்சுக்குக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கும். இதனால் வேகப்பந்துவீச்சாளர்களை நம்பியே எல்லா அணிகளும் களமிறங்கும். அதிகபட்சமாக ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்துக்கொள்ளலாம். 

முதல் டெஸ்ட் முடிந்த பிறகு கோலி கூறியதாவது: இந்தத் தொடரில் இதே பந்துவீச்சுக் கூட்டணியுடன் தான் (4 வேகப்பந்து வீச்சாளர்கள் + ஒரு சுழற்பந்துவீச்சாளர்) விளையாட வாய்ப்புள்ளது. அதேநேரம், சூழலுக்கு ஏற்றாற்போல அணியில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் எங்களுடைய பலம். இந்தப் பந்துவீச்சுக்கூட்டணிதான் முன்னேறிச் செல்ல சரியாக இருக்கும் என்றார். 

இந்தக் காரணங்களால் அஸ்வினுக்காக வாய்ப்புகள் குறைந்துவிடுமா, இங்கிலாந்து தொடரில் ஒரு டெஸ்டிலாவது அஸ்வின் விளையாடுவாரா என்கிற கேள்விகள் எழுந்தன.  

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டிலும் அஸ்வின் இடம்பெறவில்லை. டாஸ் நிகழ்வின்போது இதற்கு விராட் கோலி அளித்த விளக்கம்:

ஆட்டத்துக்கு முந்தைய 12 பேரில் அஸ்வினும் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஆடுகளத்தைப் பார்த்த பிறகு நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுவதே அணிக்குச் சரியாக இருக்கும் எனத் தோன்றியது என்றார்.

எனினும் இந்திய அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பெறாததற்கு சமூகவலைத்தளங்களில் பலரும் கோலிக்கு எதிரான தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான், ட்விட்டரில் கூறியதாவது: இங்கிலாந்து சரியான அணியைத் தேர்வு செய்துள்ளது. இந்தியா அப்படியல்ல. கூடுதல் பேட்டிங் பலம் மற்றும் தரமான பந்துவீச்சுக்காக அஸ்வின் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எல்லாச் சூழல்களிலும் அவர் நன்குப் பந்துவீசக் கூடியவர் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.