ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பரபரப்பாக முடிந்த டெஸ்ட்: 1 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய மே.இ. தீவுகள் அணி

ரோச் 30, சீல்ஸ் 2 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் மே.இ. தீவுகள் அணி வெற்றியைப் பரிசாக அளித்தார்கள்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2021, 6:39 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்டில் பரபரப்பான முறையில் 1 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது பாகிஸ்தான் அணி. கிங்ஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக,  89.4 ஓவா்களில் 253 ரன்களுடன் முடிவுக்கு வந்தது மேற்கிந்தியத் தீவுகளின் முதல் இன்னிங்ஸ். பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸில் 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் டெஸ்டில் வெற்றி பெற மே.இ. தீவுகள் அணிக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் சிறப்பாகப் பந்துவீசியதால் 151 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது மே.இ. தீவுகள் அணி. இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கெமர் ரோச்சும் சீல்ஸும் நிலைமையைச் சமாளித்து ஆட்டமிழக்காமல் மே.இ. தீவுகள் அணிக்கு மறக்க முடியாத ஓர் வெற்றியை அளித்தார்கள். மே.இ. தீவுகள் அணி, 56.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து வெற்றியடைந்தது. ரோச் 30, சீல்ஸ் 2 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் மே.இ. தீவுகள் அணி வெற்றியைப் பரிசாக அளித்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.