ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேர்வுக்குழுவினருடன் விவாதித்து முடிவெடுப்போம்: விராட் கோலி அளித்த முக்கியத் தகவல்

செய்தியாளர் சந்திப்பில் இதைப் பற்றி கூற முடியாது...

News image
Updated On :6 டிசம்பர் 2021, 9:30 am

DIN

தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டிய வீரர்கள் குறித்து தேர்வுக்குழுவினருடன் விவாதித்து முடிவெடுப்போம் என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நடைபெற்றது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. ரஹானே, புஜாரா சமீபகாலமாகச் சரியாக விளையாடாததால் இருவரையும் அணியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் விராட் கோலி பேசியதாவது:

ரஹானே நன்றாக விளையாடுகிறாரா இல்லையா என நான் முடிவெடுக்க முடியாது. கடினமான சூழலிலும் முக்கியமான ஆட்டங்களிலும் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்குப் பக்கபலமாக இருக்கவேண்டிய முக்கியம். அழுத்தம் காரணமாக, அடுத்தது என்ன என வீரர் கவலைப்படும்படியான நிலைமையை அணியில் கொண்டு வர மாட்டோம். வெளியில் உள்ள சூழலைக் கொண்டு எந்த வீரரைப் பற்றியும் முடிவெடுக்க மாட்டோம். 

தேர்வுக்குழுவினருடன் முக்கியமான விவாதம் செய்யப்போகிறோம். இது ஆரோக்கியமான தலைவலி தான். இதுபோன்ற விஷயங்களில் தெளிவு வருவது நல்லது. தென்னாப்பிரிக்கத் தொடருக்கு முன்பு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருப்பது நல்லது. தங்கும் விடுதிக்குச் சென்ற பிறகு உடனடியாக விவாதிக்கவுள்ளோம். நடுவரிசை வீரர்கள் பற்றிய விவாவதம் நடத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட இடங்களுக்கு உகந்த பிரத்யேக பேட்டர்கள் யார் யார் எனப் பார்க்கவேண்டும். செய்தியாளர் சந்திப்பில் இதைப் பற்றி கூற முடியாது. அணிக்கும் தனிப்பட்ட வீரருக்கும் சிறந்தது எது எனப் பார்த்து இறுதி முடிவுக்கு வரவேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.