இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற கையோடு இந்தத் தொடரில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நிலையில் இந்திய அணியை எதிா்கொள்கிறது. இரு அணிகளுமே வலுவான வீரா்களைக் கொண்டுள்ளதால் இந்த டெஸ்ட் தொடா் மீது மிகுந்த எதிா்பாா்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அஸ்வின், பும்ரா மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். ஒரு டெஸ்ட் மட்டும் விளையாடியுள்ள வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள். பும்ரா, கில், வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூவரும் இந்திய மண்ணில் முதல்முறையாக டெஸ்ட் விளையாடுகிறார்கள். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது 100-வது டெஸ்டை விளையாடுகிறார்.
தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸும் டாம் சிப்லியும் இந்தியப் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். இதனால் 23 ஓவர்கள் வரை விக்கெட் விழவில்லை. 33 ரன்கள் எடுத்திருந்த பர்ன்ஸ், அஸ்வின் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று, ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய டான் லாரன்ஸை எல்பிடபிள்யூ முறையில் டக் அவுட் செய்தார் பும்ரா. இது இந்திய மண்ணில் பும்ரா எடுக்கும் முதல் டெஸ்ட்.
முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது. சிப்லி 26, ரூட் 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனாட்சி அம்மன் கோயிலில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ்!

பெட்ரோல் கவலையா? அதிரடி விலை குறைப்பு! ரூ. 60,000க்கு ஓலா மின்சார பைக்!
கேரளத்தில் பேசிய கார்கே! குஜராத்தில் வலுக்கும் எதிர்ப்பு! என்ன பேசினார்?

தேவ்தத் படிக்கல் தொடர்ந்து இப்படியே விளையாடினால்... என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


