ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றி: தொடரை வென்று அபாரம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 2:26 pm

DIN


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 272 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் 298 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 370 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 59 ரன்களுடனும், வாண்டர் டசன் 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. கடைசி நாளில் தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 243 ரன்கள் தேவைப்பட்டன. வாண்டர் டசன் கூடுதலாக ஒரு ரன் கூட சேர்க்காத நிலையில் ஹசன் அலி பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய அனுபவ வீரர் பாப் டு பிளெஸ்ஸி 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து, மார்கிரமுடன் தெம்பா பவுமா இணைந்தார். இந்த இணை வெற்றி இலக்கை நோக்கி பாட்னர்ஷிப் அமைத்தது. மார்கிரம் சதமடிக்க, பவுமா அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கிரம் 108 ரன்களுக்கு ஹசன் அலி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே கேப்டன் குயின்டன் டி காக் விக்கெட்டையும் ஹசன் அலி வீழ்த்தினார். இவர்களைத் தொடர்ந்து, பவுமாவும் 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

இதனால், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களால் பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை. முல்டர் கடைசி விக்கெட்டாக 20 ரன்களுக்கு யாசிர் ஷா சுழலில் வீழ்ந்தார். 274 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழந்தது. இதன்மூலம், பாகிஸ்தான் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. 2003-க்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதன்முறை.

பாகிஸ்தான் தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸிலும் ஹசன் அலி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே, அவரே ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தட்டிச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.