ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சென்னை டெஸ்டில் வாஷிங்டன் சுந்தர் நீக்கம்: ரோஹித் சர்மா அரை சதம்!

1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் அரை சதமெடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

News image
Updated On :13 பிப்ரவரி 2021, 5:25 am

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ரோஹித் சர்மா 47 பந்துகளில் அரை சதமெடுத்துள்ளார். 

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-ஆவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

சென்னையில் இன்று தொடங்கிய 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அக்‌ஷர் படேல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். இந்த டெஸ்டுக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஷுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 47 பந்துகளில் அரை சதமெடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்திய அணி, 15 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 50, புஜாரா 10 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.