இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகள்: தோனியின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி!
30 டெஸ்டுகளில் 21 வெற்றிகளை தோனி பெற்ற நிலையில் கோலி 28 டெஸ்டுகளில்...


இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் விராட் கோலி.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் 2-வது டெஸ்டை, 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.
கோலியின் தலைமையில் இந்திய அணி பெறும் 21-வது டெஸ்ட் வெற்றி இது. இதன்மூலம் இந்திய மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட தோனியின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார். 30 டெஸ்டுகளில் 21 வெற்றிகளை தோனி பெற்ற நிலையில் கோலி 28 டெஸ்டுகளில் இந்த வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகளைச் சேர்த்து கோலியின் தலைமையில் இந்திய அணி 34 வெற்றிகளைப் பெற்றுள்ளது. ஆனால் தோனியின் தலைமையில் 27 வெற்றிகள் மட்டுமே கிடைத்துள்ளன.
சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் வெற்றிகள்
30 கிரீம் ஸ்மித்
29 ரிக்கி பாண்டிங்
22 ஸ்டீவ் வாஹ்
21 தோனி
21 விராட் கோலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...