தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டிலிருந்து விலகினார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா!

News image
Updated On :27 பிப்ரவரி 2021, 8:08 am

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது.

முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்த ஆமதாபாத் ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, ஜோ ரூட் 5 விக்கெட்டுகள் எடுத்து அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு வீழ்ந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 81 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, 49 ரன்கள் வெற்றி இலக்கை 2-ஆம் நாளிலேயே எட்டி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. 11 விக்கெட்டுகள் எடுத்த அக்ஸா் படேல் ஆட்டநாயகன் ஆனாா். 

மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், மார்ச் 4 அன்று ஆமதாபாத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் 4-வது டெஸ்டிலிருந்து சொந்தக் காரணங்களுக்காக பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதையடுத்து 4-வது டெஸ்டில் இந்திய அணியில் உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் என இருவரில் ஒருவர் இடம்பிடிப்பார் எனத் தெரிகிறது.

3-வது டெஸ்டில் பும்ரா மொத்தமாக 6 ஓவர்கள் மட்டுமே வீசினார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலிருந்து பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த மாதம் புணேவில் நடைபெறவுள்ள 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பும்ரா பங்கேற்கவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.