24 மணி நேர கண்காணிப்பில் கங்குலி: மருத்துவர்
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிப்பில் இருப்பார் என்று உட்லாண்ட்ஸ் மருத்துவமனை மருத்துவர் அஃதாப் கான் சனிக்கிழமை தெரிவித்தார்.


பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிப்பில் இருப்பார் என்றும் அவர் ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பிறகு சுயநினைவுடன் இருக்கிறார் என்றும் உட்லாண்ட்ஸ் மருத்துவமனை மருத்துவர் அஃதாப் கான் சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் மருத்துவர் தெரிவித்ததாவது:
"சௌரவ் கங்குலிக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர் தற்போது சீராக உள்ளார். 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார். அவரது இருதயத்தில் 2 அடைப்புகள் உள்ளன. அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்படும். தற்போதைய நிலையில் அவர் சீராக இருக்கிறார். அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திங்கள்கிழமை ஆலோசனை நடைபெறுகிறது. அவர் அபாயகர கட்டத்தில் இல்லை, நன்றாக பேசுகிறார்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...