தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா, நவ்தீப் சைனி: இந்திய அணி அறிவிப்பு

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2021, 7:36 am

DIN

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, சைனி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது. 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நாளை முதல் தொடங்குகிறது. 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகிறது.

இந்நிலையில் சிட்னி டெஸ்டில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியிலிருந்து மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். கடந்த டெஸ்டில் விளையாடிய உமேஷ் யாதவ், காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் சிட்னி டெஸ்டில் ரோஹித் சர்மா, சைனி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். விஹாரி தனது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

தமிழக வீரர் நடராஜன், சிட்னி டெஸ்டில் அறிமுகமாவார் என பலரும் ஆசைப்பட்டார்கள். ஆனால் நடராஜனின் டெஸ்ட் அறிமுகம் சிட்னியில் நிகழவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும் சைனி, சிராஜ் போல கவனம் ஈர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்திய அணி

ரோஹித் சர்மா
ஷுப்மன் கில்
புஜாரா
ரஹானே (கேப்டன்)
விஹாரி
ரிஷப் பந்த்
ஜடேஜா
அஸ்வின்
பும்ரா
சிராஜ்
நவ்தீப் சைனி (அறிமுகம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.